டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றிவாகை சூடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பதக்கங்களை, மறுசுழற்சி முறையில் பழைய மொபைல் போன்களை கொண்டு உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
பழைய மொபைல் போன்:
இதுதொடர்பாக, டோக்கியோ 2020 விளையாட்டு முகமை இயக்குநர் கோஜி முரோபியூசி கூறியதாவது, ஒலிம்பிக் பதக்கங்களை உருவாக்குவதற்காக, மக்களின் பழைய மொபைல் போன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நாட்டில் இயற்கை வளங்களை அளவாக பயன்படுத்தும் பொருட்டு, இத்திட்டத்தை கையாள உள்ளோம், இதன்மூலம், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.
சேகரிப்பு பெட்டிகள்:
பழைய மொபைல் போன்களை மக்களிடமிருந்து பெறும்பொருட்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல், தொலை தொடர்பு நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.
ஜப்பான் நாட்டில் மினரல் வளங்கள் குறைவாக இருப்பதன்காரணமாகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதக்கங்கள் உருவாக்குவதற்கு தேவையான மெட்டல்களை, கார் நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளி்ட்டவைகளிடமிருந்தும் பெற திட்டமிட்டுள்ளதாக முரோபியூசி கூறினார்.
தனிமங்கள்:
எலெக்ட்ரானிக் உபகரணங்களான ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்டவைகளில், பிளாட்டினம், பெல்லேடியம், தங்கம், வெள்ளி, லித்தியம், கோபால்ட், நிக்கல் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன.
உடைக்கப்பட்ட கார்கள் மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகளில் இரும்பு, செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன.
மறுசுழற்சி:
மக்களிடமிருந்து பெறப்படும் மொபைல் போன்களை உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகரணங்கள், கார் நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிலிருந்து பெறப்படும் எலெக்ட்ரானிக் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் தனிமங்களை கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் செய்யப்பட உள்ளன.
எலெக்ட்ரானிக் கழிவுபொருட்களை மறுசுழற்சி செய்யும் பணிகளில், இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
English summary:
Tokyo: Japan's capital Tokyo, the Olympic Games are to be held in the year 2020. TRIUMPHANT the Olympic medals will be given to the men and women, old mobile phones are recycled in Japan, plans to build with.