சென்னை : முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு, பெரும்பான்மையை ஆதரவு உள்ளதா என்பதை நிருபிக்க, நாளை, 18ம் தேதி, சட்டசபை கூடுகிறது.
முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து, அந்தப் பதவியை பிடிக்க முற்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் சிறை சென்றார். இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட இடைப்பாடி பழனிச்சாமி, நேற்று முதல்வராக பதவியேற்றார். அவர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
கூவத்தூரில் சிறை வைத்துள்ள, எம்.எல்.ஏ.,க்களை, அதிக நாட்கள் தங்கள் பிடியில் வைத்திருக்க முடியாது என்பதால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பாடு செய்வது என, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, சட்டசபை கூட்டம் நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை, 11:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது; அதில், புதிய அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று அறிவித்தார்.
சட்டசபையில், ஒரு காலியிடம் தவிர, அ.தி.மு.க.,விற்கு, 135; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று என, மொத்தம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், பன்னீர்செல்வம் உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள், தனி அணியாக உள்ளனர். மீதம், 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதரவு அளித்தால் மட்டுமே, இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நிலைக்கும்.
English summary:
Chennai: Chief Edappadi Palanisamy led regime, demonstrating that there is majority support, tomorrow, on the 18th, the Assembly meets.