லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று(பிப்.,19) நடந்த 3வது கட்ட சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீத ஓட்டுப்பதிவு பதிவானது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த பிப்., 11, 15-ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
61 சதவீத ஓட்டுப்பதிவு:
இந்நிலையில், 11 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. இதில், 826 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷன் தெரிவித்தார். அமைதி முடிந்த தேர்தல், இறுதி நிலவரப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரவித்தார்.