லக்னோ: உ.பி.,யில் இன்று(பிப்.,23) நடந்த 4ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.
61% ஓட்டுப்பதிவு:
உ.பி.,யில் சட்டசபை
தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று(23ம் தேதி) 12 மாவட்டங்களில் 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீதம் அளவிற்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் வரையில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 கட்டங்களாக..
உ.பி.,யில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், ஆட்சியை பிடிக்க பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முட்டி மோதுகின்றன. அடுத்த கட்ட ஓட்டுப்பதிவுகள் பிப்.,27, மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.