சென்னை: மக்கள் விரும்பாத சசிகலாவின் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்படும் என ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கூறினார்
சென்னை மெரினாவில் ஜெ., நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். சசிகலா ஆதரவாளரான அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்றார். அவர் தனது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மெரினா சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து இன்று இரவு 7.45 மணியளவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெ., நினனவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொன்னையன், செம்மலை, மதுசூதனன், பாண்டியராஜன், முனுசாமி, பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பன்னீர் செல்வம் அளித்த பேட்டி,
பதவி ஏற்றுள்ள ஆட்சி ஜெ., யின் உண்மையான விசுவாசிகளுடைய ஆட்சி அல்ல. இன்னும் சொல்லப்போனால் சசிகலாவின் குடும்ப ஆட்சிதான் இன்று பதவியேற்றுள்ளது. இதனை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சிறிது காலத்தில் இந்த ஆட்சி தூக்கி ஏறியப்படும். மக்கள்விரும்பாத ஆட்சி தான் பதவி ஏற்று்ள்ளது. மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். மீண்டும் ஜெ., ஆட்சியை அமைப்போம். எம்.எல்.ஏ.க்கள் நியாயமான முடிவு எடுக்க வேண்டும்.
English Summary:
Chennai: Sasikala unpopular regime of the family at the memorial of the former Chief Minister Jayalalithaa ops to be thrown out. Said