புதுடில்லி : மத்திய பட்ஜெட்டை திட்டமிட்டபடி தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் கேரள எம்.பி.,யின் மறைவு காரணமாக பட்ஜெட் தாக்கலை ஒருநாள் ஒத்திவைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பட்ஜெட்டை தள்ளி வைக்க வலியுறுத்தல் :
கேரள எம்.பி., அகமது திடீரென மாரடைப்பால் காலமானதால், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பட்ஜெட் தாக்கலை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவருக்கு மரியாதை தரும் வகையில் அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கேரள மாநில எம்.பி.,க்களை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் குரல் எழுப்புமாறு வலியுறுத்த போவதாக லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கடும் தாக்கு :
காங்கிரஸ் மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்க மறுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இது மரபுக்கு எதிரானது. மத்திய அரசு மிகப் பெரிய தவறு செய்கிறது. ஒருநாள் பட்ஜெட்டை தாமதமாக தாக்கல் செய்வதால் ஒன்றும் ஆகி விடாது. அகமது உயிரிழந்தது தெரிந்தும், பட்ஜெட்டை தள்ளி வைக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. பட்ஜெட் தள்ளி வைத்து, அவையையும் ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English summary:
New Delhi: The government is making all preparations to file the planned budget. The Kerala MPs, including the dissolution of the opposition parties are urging Congress to postpone the day of the budget.