புதுடில்லி: வீரர்களுக்கு மோசமான உணவு வழங்குவதாக சமூக வலைதளத்தில் புகார் கூறிய எல்லை பாதுகாப்பு வீரரின் வி.ஆர்.எஸ்., மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஎஸ்எப்பின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தங்களுக்கு ரொட்டியும், பாலும் வேகவைத்த பருப்பும் மட்டுமே உணவாக தரப்படுவதாகவும், எல்லையில் 11 மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டு மோசமான தட்பவெப்ப நிலையில் பணிபுரியும் அனைவரும் வெறும் வயிற்றுடனேயே தூங்க செல்வதாக தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
புகார்:
இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவின் மனைவி, தனது கணவர் தன்னுடன் பேசினார். அப்போது, தான் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளேன். தனக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என புகார் கூறினார்.
நிராகரிப்பு:
தேஜ்பகதூர் யாதவ், விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்படுவதாக பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது கோர்ட் விசாரணை நடைபெறுவதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாதவ் மனைவி கூறுவது போல், வீரர் துன்புறுத்தப்படவில்லை. நெருக்கடி ஏதும் ஏற்படுத்தவில்லை. அவர் கைது செய்யப்படவும் இல்லை. வி.ஆர்.எஸ்., விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் யாதவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The players to deliver food to the poor in the community complained that the border guards of the VRS website., Rejected the petition.