மும்பை: மும்பை மாநகராட்சி உள்ளிட்ட மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, இன்று காலை துவங்கியது. அனைவரும் மும்பை மாநகராட்சி முடிவுகளை எதிர்பார்த்து உள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜ., சிவசேனா கூட்டணி கட்சிகளாக உள்ளன. இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டன.மும்பை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 25 ஜில்லா பரிஷத், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது. சராசரியாக, 56 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மும்பை மாநகராட்சியில், 227 வார்டுகள் உள்ளன. மொத்தம், 5,777 இடங்களுக்கு 21 ஆயிரத்து 620 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையில், 2,275 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிவசேனா கட்சி அமோகம் :
தற்போதைய நிலவரப்படி சிவசேனா, பா.ஜ., கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் 3 வது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 4 வது இடத்திலும், நவநிர்மாண் கட்சி 5 வது இடத்திலும் இருந்து வருகிறது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றும் என தெரிகிறது.