நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து, சபாநாயகரும், சட்டசபை செயலரும் அறிக்கை தாக்கல் செய்த பின், கவர்னர் இறுதி முடிவு எடுக்க உள்ளார்.
முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது, நேற்று முன்தினம்(பிப்.,18), சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி, தி.மு.க.,வும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினரும், நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, புகார் அளித்தனர். இவற்றின் மீது, கவர்னர் விசாரணையை துவக்கி உள்ளார்.
ஓட்டெடுப்பு நடந்தது குறித்த முழு விபரங்களை, சபாநாயகரும், சட்டசபை செயலரும், முறைப்படி கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கை தாக்கலானதும், அதன் விபரங்களை, கவர்னர் ஆய்வு செய்வார். அதன் பின், ஓட்டெடுப்பு தீர்மானம் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து, இறுதி முடிவு எடுப்பார் என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.