
அவரது, 'லேட்டஸ்ட் பேஸ்புக்' பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு, மூளையை போட்டு கசக்க வேண்டியதில்லை.
பச்சை குழந்தைக்கும் கூட புரியும் வகையில், கட்ஜு பதிவிட்ட முகநுால் பதிவு:
அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது. இவ்வாறு கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.