சென்னை: ‛சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு அறிவிக்கப்பட்டால் வரவேற்போம்' என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் தி.மு.க.
செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரிய குழப்பம் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தனது நம்பிக்கை ஓட்டெடுப்பை நாளை கூட உள்ள சட்டசபையில் கோர இருக்கிறார். ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்க உள்ளோம். ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால் அதை வரவேற்போம்