சென்னை: ‛நம்பிக்கை ஓட்டெடுப்பில் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் குடும்ப ஆட்சி வர கூடாது என செயல்பட்டவர் ஜெயலலிதா. அவர் குடும்ப ஆட்சியை கடுமையாக எதிர்த்தவர். ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட குடும்பம் தற்போது அ.தி.மு.க.,வை கைக்குள் கொண்டு வந்துள்ளது.
அந்த குடும்பத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செயல்படுவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். எம்.எல்.ஏ.,க்கள் எவ்வித ஆசை வார்த்தைக்கும் மயங்க கூடாது.
சட்டசபையில் நாளை (பிப்.,18) நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.