சென்னை: ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:வழக்கின் உண்மை தன்மையை நன்கு விசாரித்த பிறகு, நான்கு பேருக்கும் எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது. எனவே, நான்கு பேரும் சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜராகி, பாக்கி உள்ள சிறை தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி அமித்வா ராய் தனியாக பிறப்பித்த உத்தரவில், ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது' என்று கூறியுள்ளார்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி அமித்வா ராய் தனியாக பிறப்பித்த உத்தரவில், ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது' என்று கூறியுள்ளார்.