போபால் : புதிய ரூ.2000 நோட்டு கொண்டு வந்துள்ள முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரூ.2000 நோட்டுக்கள், ஊழலை எளிமையாக்கி உள்ளது என யோகாகுரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்காக பா.ஜ., அரசை நான் ஆதரித்தேன். சில நல்ல பணிகளை ஆதரிக்கும்படி காங்., என்னிடம் கேட்டிருந்தால் கூட, அவர்களுக்கு நான் ஆதரவு அளித்திருப்பேன். ரூ.2000 நோட்டு கொண்டு வந்தது நல்ல விஷயமல்ல. பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதும், ரூ.2000 நோட்டு கொண்டு வரப்பட்டதும் குற்றங்களை உருவாக்கும் மையம். ஊழலை எளிமையாக்கி உள்ளது.
மறுபரிசீலனை செய்யனும் :
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை போதை விற்பனையாளர்கள், பயங்கரவாதிகள், நக்சலைட்கள் தான் பயன்படுத்துகிறார்கள். ரூபாய் நோட்டை பிரதமர் எதற்காக வாபஸ் பெற்றார் என தெரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது எந்த நாட்டின் பொருளாதாரத்திற்குள் நல்லதல்ல. இதனால் ரூ.2000 நோட்டுக்கள் கொண்டு வந்துள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இன்னும் நம்புகிறேன் :
வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்பேன், ஊழலை ஒழிப்பேன் என மோடி கூறியதால் தான் 2014 லோக்சபா தேர்தலின் போது அவருக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு ஆகியும் எதுவும் நடக்கவில்லை. மீதம் இருக்கும் 2 ஆண்டுகளிலாவது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இப்போதும் அவரை நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- ரூ.2000 தேவையா? :