அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு வாரத்திற்கு முன்பு 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. இதனால் கடுப்பான ட்ரம்ப், 'நீதிபதியின் இந்த தீர்ப்பினால், மிக ஆபத்தானவர்கள் நாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இது மிக மோசமான முடிவு' என்று ஏற்கனவே ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் நீதிமன்ற அமைப்பை சாடியிருக்கிறார் ட்ரம்ப்.
'ஒரு நீதிபதி நமது நாட்டை அபாயத்தில் தள்ளுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏதாவது விபரீதம் நடந்தால், அவரையும் நீதிமன்ற அமைப்பையும் சாடுங்கள் என்று குறிபிட்டுள்ள அவர், தனது மற்றொரு ட்வீட்டில் மக்கள் (அமெரிக்காவிற்குள்) நிரம்பி வழிகிறார்கள்' என்றும், 'அமெரிக்காவிற்கு வரும் மக்களை மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்குமாறு உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் எனது வேலையை நீதிமன்றங்கள் கடினமாக்கியுள்ளன' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.