சென்னை: சட்டசபையில் நாளை(பிப்.,18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இடைப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவர் 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மை ஆதரவை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார். இதையடுத்து, சட்டசபையில் நாளை(பிப்.,18) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
இடைப்பாடிக்கு எதிராக ஓட்டு:
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று(பிப்.,17) மாலை நடந்தது. இதில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 89 பேரும் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டது.
காங்., மெளனம்:
இதற்கிடையே தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், "இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிப்பார்கள் என வெளியான தகவல் பொய்யானது. எனக்கு டுவிட்டர் பயன்படுத்த தெரியாது. எனது பெயரில் வேறு யாரோ டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். காங்., எம்.எல்.ஏ.,க்கள் நாளை (பிப்.,18) சட்டசபையில் ஓட்டளிக்கும் போது எங்கள் முடிவை தெரிந்து கொள்ளுங்கள். சட்டசபையில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. காங்., தலைமை எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்படுவார்கள்" என்றார்.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டத்திலும் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டது. அக்கட்சியில் உள்ள ஒரே ஒரு எம்.எல்.ஏ., எதிராக ஓட்டளிக்க உள்ளார்.
English Summary:
Chennai: Assembly tomorrow (Feb., 18) the confidence vote against Poll, Chief edappadi Palanichany DMK has decided.