சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் எதிர்ப்பதையே முழு நேரத் தொழிலாக வைத்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அப்படியே மாறியிருக்கிறார்.
குறிப்பாக, சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொண்ட பின், பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக மாறி விட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கட்டாயம் தண்டனை பெறுவார் என்று சொல்லிக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சாமி, தற்போது, சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து, தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சீராய்வு மனு போட்டு, அவரை, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். அதற்கான யோசனைகளையும், சட்ட நுணுக்கங்களையும் தான் அறிந்து வைத்திருப்பதாகவும் கூறினார்.
நெருக்கடி:
கூடவே, சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை உடனடியாக கவர்னர் அழைத்து, முதல்வராக பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி வந்த சுப்பிரமணியன் சாமி, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும், பழனிச்சாமியை, கவர்னர் பதவியேற்க அழைக்க வேண்டும் என்று கூறி வந்தார்.
அவர் கொடுத்த நெருக்கடிக்குப் பின் தான், கவர்னர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்ததாக, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். இதனால், எடப்பாடியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தப் பின், அ.தி.மு.க.,வினர் பலரும் சாமிக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனராம்.
English summary:
Chennai: AIADMK., General Secretary Shashikala, former Chief Minister Jayalalithaa to oppose the full-time job that kept the senior BJP leader subramaniyan samy, after her death, just changed.