சென்னை : தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கும் எதிராக நெட்டிசன்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.
சசிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் :
சசிகலாவுக்கு எதிராக www.change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 05 (நேற்று) இந்த கையெழுத்து இயக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,55,447 க்கும் அதிகமான கையெழுத்துக்கள் சசிகலா முதல்வராவதற்கு எதிராக பெறப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து தளம் துவங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த கையெழுத்துக்களை ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.change.org