மதுரை: சசி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு அளித்த மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சரவணன், மதுரை வந்த போது , அவருக்கு அரசமரம் பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இவர் வீதி ,வீதியாக சுற்றி பின்னர் எம்.எல்.ஏ.,அலுவலகம் சென்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் ; மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே எனது பணி. மக்கள் ஆதரவு அளித்தததால் நானும் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு அளித்தேன். இடைப்பாடி அரசு நீடிக்குமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றார். தங்களுக்கு மிரட்டல் ஏதும் வருகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு அப்படி ஏதுமில்லை என பதில் அளித்தார்.
மாறு வேடத்தில் தப்பியவர்:
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது சரவணன் எம்எல்ஏ., மாறு வேடத்தில் தப்பித்து சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.