சென்னை: ''பணிவு காட்டுவதில், பணிவுக்கு பணிவு காட்டும் என்னையும் மிஞ்சி விட்டார், தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் முன், எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் கொடுத்த, தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
அப்போது, மதுராந்தகம் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி, பள்ளியில் ஆசிரியர் முன், மாணவர்கள் கைகட்டி நிற்பது போல் நின்று, தான் கொடுத்த திருத்தங்களை, முன்மொழிவதாக கூறினார்.
அவரது செய்கையால், சபையில் சிரிப்பலை எழுந்தது. இறுதியாக, முதல்வர் பன்னீர்செல்வம், பதிலுரை துவங்கிய போது, ''எம்.எல்.ஏ., புகழேந்தி, பாலர் பள்ளியில் மாணவர்கள் கைகட்டி, பவ்யம் காட்டுவது போல், இங்கு பணிவு காட்டினார். பணிவுக்கு பணிவு காட்டும் என்னையும், மிஞ்சி விட்டார். இதை, அவர் தொடர வேண்டும்,'' என்றார்.
இதனால், சட்டசபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
English Summary:
Chennai: '' in showing humility, a humility that task was beyond me, DMK - MLA, EDITORIAL, '' the chief minister said Panneerselvam, and laughter arose in the assembly.