புதுடில்லி: நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
வெற்றி:
நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ராணுவம், விமானப் படை, கடற்படையில் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வப்போது, புதிதாக தயாரிக்கப்படும் ஏவுகணைகளை, சோதனை செய்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில், கடற்படையில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு:
உள்நாட்டு தயாரிப்பில் உருவான, கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, அரபிக் கடலில் நேற்று நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், நீர்மூழ்கி கப்பலில் இருந்து, கடல் பகுதியில் மட்டுமின்றி, தரையிலும், வான்வெளியிலும்
எதிரியின் இலக்கை தாக்கி அழிக்க முடியும் என்பதால், நாட்டின் பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளது.
English Summary:
NEW DELHI: submarine, from target to target enemy missile destroyer, has been successfully tested yesterday.