லண்டன்: வங்கியில் வாங்கிய கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்துவது தொடர்பாக வங்கிகளுடன் பேச தயாராக உள்ளதாக லண்டனில் உள்ள விஜய் மல்லையா கூறியுள்ளார்.
ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய பின் அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் வசித்து வரும் மல்லையா டுவிட்டரில் வெளியிட்ட செய்தி:
ஒரே தவணையில் கடனை திருப்பி செலுத்தும் கொள்கை பொதுத்துறை வங்கிகளிடம் உள்ளன. இதன்படி கடன் வாங்கிய நூற்றுக்கணக்கானோர் திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால், எங்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கூறிய கோரிக்கைகளை ஆலோசனை செய்யாமல் வங்கிகள் நிராகரித்து விட்டன. நேர்மையான முறையில் கடனை திருப்பி செலுத்த வங்கிகளுடன் பேச தயாராக உள்ளேன். சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வங்கி நிர்வாகம் எங்களுடன் பேச உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.