புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி:
விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி, ''இந்த ஆண்டு ஜனவரி, 1 முதல், 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர்கள்
கூட்டமைப்பு தலைவர், கே.கே.என்.குட்டி தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு:
நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டில், 4.95 சதவீதம் அளவுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், தசம எண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
மேலும், 2016 ஜூலை, 1 முதல் அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், தற்போது, 2 சதவீதம் அளவுக்கே உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 4 சதவீதம் வரை வழங்கப்பட வேண்டும் என, ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
English summary:
New Delhi: The central government employees and pensioners, 2 to 4 per cent is expected to be promoted to the DA.