புதுடில்லி : மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை போன்று 2.80 லட்சம் ஊழியர்களை கூடுதலாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு, வருமான வரித்துறை உள்ளிட்ட முக்கிய வரி வசூல் துறைகளில் கூடுதலாக ஆட்கள் தேவைப்படுகிறது. இதனால் சுங்க வரி, கலால் வரி, வருமான வரி உள்ளிட்ட துறைகளில் 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 46,000 முதல் 80,000 பேரை கூடுதலாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது சுங்க துறையில் 50,600 பேரும், கலால் துறையில் 91,700 பேரும் பணியாற்றி வருகின்றனர். விரைவில் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி துறைக்கு 41,000 பேர் வரை தேவை.
ரயில்வே துறை ஊழியர்கள் எண்ணிக்கையில் 2018 ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப் போவதில்லை என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் விண்வெளி, அணுசக்தி, அமைச்சரவை செயலகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகங்கள், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.