சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு தீர்வு காணும் விதமாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 8ம் தேதி சென்னை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மீண்டும் மனு: மார்ச் 8ம் தேதி உண்ணாவிரதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர். இதனால் ஓபிஎஸ் அணியினர் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக, விளக்கம் அளித்த கே.பி.முனுசாமி, ஏற்கனவே மனு அளித்து விட்டோம். இருப்பினும், போலீசார் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் ஏதும் இதுவரை வரவில்லை. இதனால் நினைவூட்டும் விதமாக மீண்டும் இன்று மனு அளித்துள்ளோம். இந்த மனு மீது இன்று மாலைக்குள் பதிலளிப்பதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் முடிவு எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்றார்.