புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறினார்.
டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் தலைமையில் சென்று சந்தித்தனர்.
மரணத்தில் சந்தேகம்:
இதன் பின்னர் மைத்ரேயன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: அதிமுக எம்.பி.,க்கள் சார்பில் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். ஜெ., மரணம் தொடர்பாக அதிமுக தொண்டர்கள் முதல் தமிழக மக்கள் வரை அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு பல முகாந்திரம் உள்ளது. ஜெயலலிதா வீட்டில் ஐ.சி.யூ., வார்டு உள்ளது. ஆனால், நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியதில் முதல் சந்தேகம் எழுந்தது. 75 நாள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, யாரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா மரணத்தில் பல குளறுபடிகள் உள்ளன. இதனை தீர்ப்பது தான் ஜெயலலிதாவுக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகும். போயஸ் கார்டனில் என்ன நடந்தது, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது என்ன நடந்தது, செப்.,22ம் தேதிக்கு முன்னர் என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள தமிழக அரசுக்கு இதுபற்றி விசாரணை நடத்த தகுதியில்லை.
செங்கோட்டையனுக்கு கண்டனம்:
இதனால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை அல்லது நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் கூறியதை ஜனாதிபதி குறிப்பு எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் கூறுவது உண்மையில்லை. தம்பிதுரை முன்னுக்கு பின் முரணமாக பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: Former Chief Minister Jayalalithaa to take action to investigate the death of the President of the Federal Government issued a request to the Rajya Sabha MP said maitreyan.