
ரயில்வே அமைச்சகத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அனுப்பியுள்ள மனு:கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து, கன்னியாகுமரி வழியாக, எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த இரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, நாகர்கோவிலில் இருந்து, சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு, இரவு நேர, புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.