புதுடில்லி: ‛ எல் நினோ பாதிப்பால், மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் பருவமழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளது' என, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது.பசிபிக் பெருங்கடலில், வெப்பமான சூழ்நிலை நிலவுவதை எல் நினோ என கூறுவர். குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதை லா நினா என அழைப்பர். இந்த இரண்டு அம்சங்களும், இந்திய பருவமழை காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. எல் நினோ காலத்தில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொழிவு குறையும்; வடகிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும்.
கணிப்பு சொல்வது என்ன:
இந்தியாவில், 2014 - 15, 2015 16ம் ஆண்டுகளில் எல் நினோ சூழ்நிலையால், தென் மேற்கு பருவ மழை பொழிவு குறைந்து வேளாண் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும், நடப்பு ஆண்டில் அதே போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றே ஆஸ்திரேலி வானிலை ஆய்வு வாரியம் கணித்துள்ளது.
எனினும், செப்டம்பர் மாதம் முதல் தான், இந்த சூழ்நிலை துவங்கும் என ஆஸி., வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதற்குள் தென் மேற்கு பருவமழை காலம் முடிந்து விடும் என வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வட கிழக்கு பருவமழை பொழிவு அதிகரிக்கும் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்படி, 2016 ஜூலை முதல், லா நினா எனப்படும் குளிர்நிலை தான் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படுகிறது. எனினும், அது பலவீனமான நிலையில் உள்ளது. நடப்பு ஆண்டு செப்டம்பருக்கு பிறகே இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.
English Summary:
NEW DELHI: The 'El Niño damage, is likely to decline for the third year in India, monsoon showers, as, according to the Australian Meteorological Board. In the Pacific Ocean, El Niño suggest that warmer atmosphere prevails. La Nina is already called a cold environment. These two factors, the major defects of the Indian monsoon season. During El Niño, the southwest monsoon showers cool to India; Northeast monsoon showers will be higher.