ஹூஸ்டன்: இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியருக்கு உதவிய நபருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அழைப்பு:
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அமெரிக்காவின் இயன் கிர்ல்லாட் என்பவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இயன் கிர்ல்லாட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார். கிர்ல்லாட் இந்தியா வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
செக்:
இந்நிலையில்,கிர்ல்லாட்டை கவுரவிக்கும் வகையில், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சார்பில் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கான செக் வழங்கப்பட்டது. இந்த செக்கை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா வழங்கினார்.
பெருமை:
இந்த விழாவில் கிர்ல்லாட் பேசுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்காவிட்டாலோ அல்லது அதற்கான முயற்சியில் நான் இறங்காமல்இருந்திருந்தால், நான் உயிரோடு இருப்பேனா என சொல்ல முடியாது. மக்கள் அதிகாரம் அளிக்க நாம் உதவ வேண்டும். நம்பிக்கை மற்றும் அன்பை பரப்ப வேண்டும். இங்கு நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.