புதுடில்லி: இந்தியாவின் பலமே ஆன்மீகம். ஆனால், சிலர் ஆன்மீகத்தை மதத்துடன் தொடர்புபடுத்தியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் பேசியதாவது: ஆன்மீகத்தை நோக்கிய பயணத்தின் முதல்படி யோகா. ஜி.டி.பி., மக்கள் தொகை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவை உலக நாடுகள் பார்க்கின்றன. இந்தியா ஆன்மீகத்திற்கும் பெயர் பெற்றது என்பதை உலக நாடுகளுக்கு தெரிந்திருக்க வாய்பு உண்டு. இந்தியாவின் பலமே, நமது ஆன்மீகமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆன்மீகத்தை சிலர் மதத்துடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இந்தியாவில் ஆன்மீகத்தை துறவிகளும், ஞானிகளும் பலப்படுத்தினர். இவ்வாறு அவர் பேசினார்.