புதுடெல்லி - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்ததற்காக அனுராக் தாகூர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார்.
சுப்ரீம் கோர்ட் கேள்வி:
லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த காலதாமதம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியது. அத்துடன் தலைவர் அனுராக் தாகூர் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்ததற்காக ஏன்? கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது.
மன்னிப்பு கேட்டார்:
இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுராக் தாகூர் நேரில் ஆஜராகி தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அத்துடன் வேண்டுமென்றே தவறான தகவலை அளிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அனுராக்தாகூர் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகுவதற்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.