பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், அஷ்வின் 'சுழலில்' அசத்த, இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், பெங்களூருவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 189, ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (79), ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்டார்க் அசத்தல்:
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா, ரகானே ஜோடி நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது. ரகானே அரை சதம் அடித்தார். பின், ஸ்டார்க் 'வேகத்தில்' அச்சுறுத்தினார். இவர் வீசிய 85வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரகானே (52) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் கருண் நாயர் டக்-அவுட்டானார். அடுத்த பந்தை சகா தடுத்து விளையாட, ஸ்டார்க் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
புஜாரா 92 ரன்கள்:
புஜாரா (92) சத வாய்ப்பை இழந்தார். ஹேசல்வுட் பந்தில் அஷ்வின் (4) அவுட்டானார். இஷாந்த் (6) கிளம்ப, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சகா (20) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.
அஷ்வின் அசத்தல்:
இதனையடுத்து 188 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ரென்ஷா 5 ரன்களில் அவுட்டானார். அஷ்வின் 'சுழலில்' வார்னர் (17) சிக்கினார். உமேஷ் பந்தில் ஷான் மார்ஷ் (9) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த அஷ்வின் இம்முறை, மிட்சல் மார்ஷ் (13), வேட் (0) ஆகியோரை வெளியேற்றினார். ஸ்டார்க் ஒரு ரன்னில் நடையைக்கட்டினார். மற்ற வீரர்களும் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.