புதுடில்லி: சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
நாட்டில், பயன்படுத்தாத நிலையில், தற்போது 72 சிறு விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் 43 விமான நிலையங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறு நகரங்களுக்கு இடையில் விமான போக்குவரத்தை நடத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் விமான சேவைக்கு முன் வந்துள்ளன.
ஆறு மாதங்களில் துவங்கும்:
இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் சிறு நகரங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கான டெண்டர் முடிவு செய்யப்பட்டு, ஆறு மாத கால அவகாசத்தில் போக்குவரத்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேர பயணம் கொண்டதாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 2500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
11 நிறுவனங்கள் போட்டி:
இது குறித்து சிவில் விமான போக்குவரத்துறை செயலர் ஆர் என் சவுபே கூறுகையில், ‛சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை துவக்க வேண்டும் என்பது தான், இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதுவரை 11 நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளன. விரைவில் சிறு விமான நிலையங்களில் வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து துவங்கும்,' என்றார்.
English summary:
NEW DELHI: Air traffic between towns in the federal civil aviation department has decided to hold.In the country, unused condition, currently there are 72 small airports. It has been decided to use 43 of these airports. The tender has been requested to conduct air traffic between the towns. Many companies have come forward for the airline.