புதுடில்லி: பிரிட்டனில்தங்கியுள்ள மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., உட்பட, 17 வங்கிகளிடம் வாங்கிய, 6,000 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து, 9,000 கோடி ரூபாயை, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பாக்கி வைத்துள்ளார். அந்தக் கடனை மீட்க,சுப்ரீம் கோர்ட்டை வங்கிகள் அணுகிய நிலையில், பிரிட்டனின் லண்டன் நகருக்கு, மல்லையா தப்பிச் சென்றார்.
இந்நிலையில் சுப்ரீம் கோரட்டில் எஸ்.பி.ஐ., தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம், மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? மல்லையா சொத்துகளின் உண்மையான பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தாரா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த ரோத்முகி, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர, பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது எனத் தெரிவித்தார்.