புதுடில்லி: 'அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் துணை பிரதமர், அத்வானி, 89, உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதை ஏற்க முடியாது' என, கூறிய சுப்ரீம் கோர்ட், இது குறித்து, வரும், 22ல் உத்தரவு பிறப்பிப்பதாக கூறியுள்ளது.
வழக்கு:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் நடந்து வருகின்றன. மசூதியை இடிப்பதற்கு சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி, பா.ஜ., மூத்த தலைவர்கள், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விடுவிப்பு:
மசூதியை இடித்ததாக, அடையாளம் தெரியாத, 'கரசேவகர்கள்' மீது, லக்னோவில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக, ரேபரேலி கோர்ட் தீர்ப்பளித்தது. இதை அலகாபாத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்க முடியாது:
இந்த வழக்கு, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப். நரிமன் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது அமர்வு கூறியதாவது: தொழில்நுட்ப காரணங்களுக்காக அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கை விசாரித்திருக்க வேண்டும். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவது குறித்து, வரும், 22ல் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

English summary:
NEW DELHI : 'Ayodhya on Babri Masjid demolition case, former Deputy Prime Minister, LK Advani, 89, including the abandonment of the charges can not accept that ", said the Supreme Court, in this regard, which, as the issuing of warrants in 22 states.