பெங்களூரு : தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில தலைநகர்பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு :
வரும் மே மாதம் முதல் பெங்களூரு நகரம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்ளது. மே மாதம் முதல், ரேஷன் முறையிலேயே தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள முக்கியமான 9 அணைகளில் 20 சதவீதத்திற்குள் குறைவாக நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடக முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு கூடுதலாக டேங்கர் லாரிகளும், போர்வெல்களும் தேவைப்படுகின்றன.
அடுத்து பருவமழை பெய்யும் வரை கர்நாடகாவில் இதே நிலை தான் நீடிக்கும் என கூறப்படுகிறது. நிலைமை சரியாகும் வரை ரேஷன் தண்ணீர் சப்ளை முறையே தொடரும் என கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு மக்கள் கோடை துவங்குவதற்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.