சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலாவை எதிர்த்து தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார், அவரது அண்ணன் மகள் தீபா. இதையடுத்து, சசிகலாவை எதிர்க்கும் அ.தி.மு.க.,வினர், அவரை நம்பி சென்றனர்.
விரைவில் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்திருந்த தீபா, கடந்த பிப்., 24ல், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை துவங்குவதாக அறிவித்தார். இது அரசியல் இயக்கம் அல்ல; ஒரு அமைப்புதான். அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை மீட்க இந்த அமைப்பு பாடுபடும் என்றும் அறிவித்தார்.
அவசர நியமனம்:
இந்த அறிவிப்பால், அவரை நம்பிச் சென்ற கட்சியினர் அனைவரும் நிலைகுலைந்து நின்றனர். இதனால், தீபாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லத் துவங்கினர். இதையறிந்ததும், மொத்தக் கூட்டமும் அங்கு சென்று விட்டால், நம்மால், அமைப்பு நடத்த முடியாது என்று பயந்து போன தீபா, அவசர அவசரமாக, பேரவைக்கு, நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த இடத்தில்தான், தீபாவுக்கும், கணவர் மாதவனுக்கும் மோதல் ஏற்பட்டது.
பேரவைக்கு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பின்புலம் சரியாக இல்லாததால், கோபமடைந்த கணவர் மாதவன், தீபாவுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டொரு நாட்கள், வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றவர், சட்டென வீடு திரும்பி, தீபா அறிவித்த நிர்வாகிகளுக்குப் போட்டியாக தன் தரப்பிலும், ஒரு நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
இதனால், தீபாவை நம்பிச் சென்ற ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வினரும் கடுமையான குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது தொடர்பாக, ஆளாளுக்கு தீபாவிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்ப, இந்த பிரச்னைகளுக்கு, சசிகலா தரப்பினர் தான் காரணம் என்று, பிரச்னையை, தினகரன் பக்கம் திருப்பினார் தீபா. ஆனால், அது எடுபடவில்லை.
தினகரன் உத்தரவு:
தீபா பேரவைக்குள் நடக்கும் மொத்த நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரன், நம்பகமான, அ.தி.மு.க., தலைவர்கள் சிலரை அழைத்து, இது தொடர்பாக பேசியிருக்கிறார்.
உடனடியாக, மாதவனை கையில் எடுங்கள். அவர் நம் பக்கம் கூட்டி வாருங்கள். அவருக்கு தேவையானதை செய்யலாம் என்று சொல்லி, உத்தரவிட, தற்போது, அந்த தலைவர்கள், மாதவனை வளைக்க, தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். .விரைவில் மாதவன், தினகரன் சந்திப்பு நிகழக்கூடும் என்று, அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி இருக்கிறது.
English summary:
Chennai: After her death, serious political opposition to Shashikala -claim declared, his niece Deepa. However, as opposed to Digg Shashikala, staggering, were entrusted to him.