சென்னை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வுகள் தகவல் தெரிவித்துள்ளன.பொதுவாக, மழை மற்றும் வெயில் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் வானிலை ஆய்வு மையம் தான் வெளியிடும். வெளிநாடுகளில் தனியார் வானிலை ஆய்வு மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தனியார் வானிலை ஆய்வு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில், ‛தமிழ்நாடு வெதர்மேன்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம், தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
2008 ல் நடந்தது என்ன:
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் பெய்யும் சராசரி மழை அளவு 20 மி.மீ., தான். ஆனால், 2008 ல், தமிழகத்தில், 167 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த, 150 ஆண்டுகளில், மார்ச் மாதத்தில் மிக அதிகபட்ச மழை பெய்தது, 2008 ல் தான். நடப்பு ஆண்டில் அதேபோன்ற ஒரு மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில், தமிழகத்தில் 54.5 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டில் அந்த அளவை தாண்டி மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டள்ளது.
சென்னையில், மார்ச் மாத சராசரி மழை அளவு வெறும் 4 மி.மீ., தான். எனினும், 2008ம் ஆண்டில், 137.9 மி.மீ., மழை பெய்துள்ளது. மார்ச் 3ம் தேதி முதல் மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தமிழகத்தின் தெற்கு உள் பகுதிகள், டெல்டா பகுதிகள், பெரியாறு அணை பகுதி, திண்டுக்கல், திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்
English summary:
Chennai: Tamil Nadu is likely to come in the heavy rainfall in March announced private meteorological information, the rain and the sun's meteorological and related information issued by the central government.