
கேரளாவைச் சேர்ந்தவர் ராய் மேத்யூ, 33வயது ராணுவ வீரர், இவர் தாம் பணியாற்றிய இடத்தில் மேல் அதிகாரிகளால் பல வகைகளில் கொத்தடிமையாக ( ஆர்டலியாக) இருந்து வந்ததையும்,
தன்னை போன்று தனது சக ராணுவ வீரர்கள் ஆர்டலிகளாக பணியாற்றியதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ராணுவம் உயர்மட்டவிசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் கடந்த பிப். 25-ம் தேதி ராய் மேத்யூ திடீரென காணாமல் போனார். போலீசார் தேடி வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் பாழடைந்த கட்டடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary:
MUMBAI: Social networking sites carried out by his superiors for exposing sweatshop soldier was found dead in mysterious circumstances.