பெங்களூரு : பெங்களூருவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அடேங்கப்பா... :
இதில், வணிகவரி துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து மட்டும் 7000 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹிப்பாபள்ளி பகுதியில் வணிக வரித்துறை துணை கமிஷனராக உள்ள கரியப்பா நிங்கப்பா மெர்னல் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் போது தான் 7000 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த புடவைகளுக்கு இடையே ரூ.4 லட்சம் மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள புடவை ஒவ்வொன்றும் ரூ.300 முதல் ரூ.20,000 வரை மதிப்புடையவை. இந்த சேலைகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. துணை கமிஷனரின் மனைவிக்கு இத்தனை புடவைகள் எங்கிருந்து வந்தன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
சோதனையிடப்பட்ட மற்ற அதிகாரிகளின் வீடுகளில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள், அதற்கான ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்க நகைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
English summary:
Bangalore: Bangalore 7 in the disproportionate assets of government officials to the action of the vigilance department officials raided yesterday.