புதுடில்லி: டில்லி பல்கலை.யை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் டில்லி பல்கலை.க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு டில்லி பல்கலை. மாணவரான உமர்காலித் என்பவரை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பா.ஜ. ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு கண்டனம் தெரிவித்தது. தேசவிரோத வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள உமர்காலித்தை அழைக்க கூடாது என கூறியது. இந்த விவகாரத்தால் கடந்த பிப்ரவரி 21-ம் தேதியன்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக வெடித்தது. வன்முறையை தூண்டிவிட்டது ஏ.பி.வி.பி. தான் என குர்மெஹர் என்ற மாணவி பேஸ்புக்கில் தனது கருத்தை பதவியேற்றம் செய்தார்.இது வைரலாக பரவியது. இதையடுத்து மாணவி குர்மெஹருக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினர் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் மாணவர்களிடையே மோதல் போக்கு வெடித்துள்ளதால் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ‛‛டில்லி பல்கலை.'' யை காப்பாற்று கோஷத்துடன் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. . இவர்களுடன் காஷ்மீர், மணிப்பூர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர் அமைப்பினரும் இணைந்துள்ளதால், வரலாறு காணாத வகையில் டில்லி.பல்கலை.க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
English summary:
NEW DELHI: Delhi University stressed the need to save the A.P.V.P Association has been carrying out continuous struggle for the Delhi University has been under heavy police protection.