லக்னோ:'பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள, காயத்ரி பிரஜாபதி, எப்படி அமைச்சராக நீடிக்கிறார் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவுக்கு, கவர்னர் ராம் நாயக் கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், தற்போது சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான, காயத்ரி பிரஜாபதி மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; அதை
த் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, கவர்னர் ராம் நாயக் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்; அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காயத்ரி பிரஜாபதி தொடர்ந்து அமைச்சராக செயல்படுவது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; அதை அவமதிப்பது போலாகும்.
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல, அவர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது; விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் அவர் எந்த அடிப்படையில், தொடர்ந்து அமைச்சராக உள்ளார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
English summary:
Lucknow: 'In the case of the rape accused are absconding, Gayatri Prajapati, continues to minister to explain how "the Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav, sent a letter to Governor Ram Naik.