
நாளை ஓட்டுப்பதிவு:
உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று(வியாழக்கிழமை) மாலையுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்., துணைத்தலைவர் ராகுல் பேசினார்.
பொய்யான வாக்குறுதி:
அவர் பேசியதாவது: மோடி தனக்கு ஓட்டு அளித்தால் கங்கையை தூய்மைப்படுத்துவதாக கூறினார். இதன்மூலம் ஆட்சி கொடுத்தால் தான் பணி செய்வேன் என கங்கையிடமே மோடி பேரம் பேசுகிறார். பொய்யான வாக்குறுதிகளையே மோடி அளித்து வருகிறார். கங்கை தாயிடமாவது மோடி தனது வாக்குறுதியைக் காப்பாற்றட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Varanasi : Modi are giving false promises Cong., Rahul alleged.