வாஷிங்டன்: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், அமெரிக்க சபாநாயகர் பால் ரெயான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஹச்.ஆர்.மெக்மாஸ்டர் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக பிப்ரவரி 28ம் தேதி வாஷிங்டன் சென்றுள்ள ஜெய்சங்கர், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் நிர்வாகத்தின் கீழுள்ள முக்கிய அதிகாரிகள், நிர்வாகிகள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வருகிறார்.
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர், கடந்த 10 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரை வெள்ளை மாளிகைக்கு சென்று சந்தித்த ஜெய்சங்கர், இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவுகள், பயங்கரவாதம், நட்புறவு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தார்.
மேலும், இந்த சந்திப்பின் போது, சமீபத்தில் கென்சாசில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்தியர் கொல்லப்பட்டதற்கு ரெயானும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து சபாநாயகர் பால் ரெயானை சந்தித்த ஜெய்சங்கர், இரு நாடுகளிடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

English summary:
Washington: Indian Foreign Secretary jeyshankar, US Speaker and US security consultant Paul Ryan is talking H.R McMastar met. McMaster America's new national security adviser, was appointed in the last 10 days before.