சென்னை: ‛ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. நகரில் முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். வளமையான விவசாயம் என முழக்கமிட்ட பா.ஜ.,அரசும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கும் ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Monday, 27 March 2017
Home »
chennai
,
dmk
,
MK stalin
,
R.K.nagar
,
tamil nadu
» பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு