தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில், வாகன நிறுத்துமிடம் அமைக்க, கேரள அரசு திட்டமிட்டது. அதற்கு, அனுமதி வழங்கக் கூடாது என, பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கு, பிப்., 17ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கை ஒத்திவைக்கும்படி கேட்டனர். அதை ஏற்காமல், தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்திக் கொள்ள, கேரள அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப்படி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English summary:
National Green Tribunal's decision, the Supreme Court, on behalf of the State Government, the petition has been filed