சென்னை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியும். 22ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தீர்கள். நேரில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் மேல்முறையீடு செய்வது ஏன்? ஒரு அதிகாரி நேரில் ஆஜராக அளித்த உத்தரவுக்கு மற்ற அதிகாரிகள் ஆஜராவது ஏன்? ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஆஜராவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். உறுதிமொழியை மீறியதால் ஜார்ஜ் மீது ஏன் சூமோட்டோ (தாமாக முன்வ வந்து) வழக்கு தொடரக்கூடாது எனக்கூறினார்.