புதுடில்லி:ரயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் ஐந்து நகரங்களை இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 20 நிமிடங்களில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு பயணம் செய்யலாம். அதேபோல் 80 நிமிடங்களில் டில்லியிலிருந்து மும்பைக்கு பயணம் செய்யலாம்.
குழாய் வடிவிலான இயந்திரத்தில் நாம் கற்பனையும் செய்ய முடியாத வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் ஒன். எலான் மஸ்க் கற்பனையில் உருவான ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்தை செயல்படுத்த எலான் மஸ்க் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த தகுதி வாய்ந்த ஐந்து வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் ஹைப்பர்லூப் ஒன் ரயில்வே திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும்:
ஹைப்பர்லூப் ஒன் கட்டமைக்க தேவையான பாகங்களில் சிலவற்றை உள் நாட்டிலேயே தயாரிக்க முடியும். இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஹைப்பர்லூப் டெக்னாலஜீஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராப் லாய்டு தெரிவித்துள்ளார். வெற்றிகரமான இறுதிகட்ட சோதனைகளை தொடர்ந்து இத்திட்டம் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
New Delhi by train, which travels at a speed of 700 miles per hour hyperloop One project will connect five cities in India reported. You can travel from Bangalore to Chennai on the 20 minutes. Nor can travel to Mumbai from Delhi in 80 minutes.