புதுடில்லி : ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பணி செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டை ஆன்லைன் மூலம் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கார்டு :
இதன் மூலம் அதிகாரிகளின் பணி செயல்பாடு விகிதம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ள உதவும் என அரசு கருதுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் ரிப்போர்ட் கார்டுகள் மீது அரசு அலுவலர்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களின் விமர்சனங்களை, எலக்ட்ரானிக் முறையில் பதிவிடமும் வழிவகை செய்யப்பட உள்ளது.
தற்போது பரிசீலனையில் இருக்கும் இந்த விதிமுறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்த விதிமுறை நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ல் தங்களின்
ரிப்போர்ட் கார்டுகளை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதிகாரிகள் தாக்கல் செய்யும் ரிப்போர்டு கார்டுகளை சரிபார்த்து, அது பற்றிய விமர்சனங்களை மார்ச் 15 ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.