மும்பை : விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் இன்று (மார்ச் 6) ஓய்வுபெறுகிறது. இவ்விழா மும்பையில் இன்று நடக்கிறது.
ஐஎன்எஸ் விராத் பயணம் :
விமான தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விராத், 1987 ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன் இக்கப்பல் 27 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படையில் சேவை புரிந்து. இக்கப்பல் 1943 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டதாகும்.
உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பலாக கருதப்படும் ஐஎன்எஸ் விராத், 30 ஆண்டுகள் இந்திய கடற்படையில் சேவை ஆற்றி உள்ளது. மிக நெருக்கடியான சமயங்களில் நாட்டை பாதுகாக்க உதவிய இக்கப்பல் இன்று தனது சேவையை நிறைவு செய்கிறது. இனி இக்கப்பலை போர்க்கப்பலாக பயன்படுத்த முடியாது. அதனால் இனி இக்கப்பல் அருங்காட்சியகமாகவோ அல்லது ஓட்டலாகவோ உருமாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் ஐஎன்எஸ் விராத் வழியனுப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொள்ள உள்ளார்.
English Summary:
Mumbai: Aircraft carrier INS Virat ship today (March 6) retirement. The ceremony is taking place today in Mumbai.